2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பஸ்ஸின் சில்லில் அகப்பட்டு, பயணி ஸ்தலத்தில் பலி

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 06 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த்

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பஸ்ஸின் சில்லில் அகப்பட்டு, அதே பஸ்ஸில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஊரெழு கிழக்கைச் சேர்ந்த தர்மலிங்கம் சதீஸ் (வயது 37) என்பவரே உயிரிழந்தார் .

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “உயிரிழந்த பயணி, யாழில் இருந்து  வயாவிளான் நோக்கி பஸ்ஸில் பயணித்துள்ளார். பயணத்தின் போது, பஸ்ஸில் தூங்கியமையால்,  வயாவிளானில் இறங்கவில்லை. பஸ் நடத்துனரும், அதைக் கவனிக்கவில்லை .

அவர் மீண்டும் வசாவிளான் செல்வதற்காக யாழ்ப்பாணம் நோக்கி மீண்டும் பஸ்ஸில் பயணித்த போது , புன்னாலைக்கட்டுவனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுக்காக வரிசையில் பஸ் காத்திருந்துள்ளது.

அதன்போது , குறித்த பயணி, பஸ்ஸில் இருந்து  கீழே இறங்கி, நிலத்தில் அமர்ந்திருந்துள்ளார் . அதனை அவதானிக்காக சாரதி பஸ்ஸை எடுத்த போது பயணி மீது பஸ் ஏறியுள்ளது .

இதில் பயணி சம்பவ இடத்திலேயே பயணி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து, பஸ்ஸின் சாரதி அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .