2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பதவியை ஒருபோதும் ஏற்க மாட்டோம்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்கள் தங்களுடைய அன்றாட பிரச்சினைகளாக பல விடயங்களை  சந்தித்து கொண்டிருக்கின்றார்கள். அது தொடர்பில் நாங்கள் டலஸ் அழக  பெரும அவர்களுக்கு எழுதிக் கொடுத்த  விடயங்களையே,  தற்போதைய ஜனாதிபதியை சந்தித்தபோதும் அவருக்கு கூறி இருக்கின்றோம்

“தமிழ் மக்கள் அன்றாடம் சந்தித்து வருகிற  முக்கியமான பிரச்சினைகளான  அரசியல் கைதிகளுடைய விடுதலை முதற்கட்டமாக ஒரு சிறு தொகையினரை யாவது விடுதலை செய்ய வேண்டும்

“அத்தோடு, காணி விடயங்களில் அதிக அக்கறை இந்த அரசாங்க செலுத்த வேண்டும்.

“கடந்த ஆட்சியின் போது அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களாக பலரை இணைத்து அதில்  ஒரு முடிவெடுக்கக்கூடிய நிலை இருக்கவில்லை

“இன்று வடக்கு ஆளுநருடைய செயற்பாடு மிகவும் பாரதூரமாக காணப்படுகின்றது. ஒரு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் எடுத்த தீர்மானத்தை நிராகரித்து, வடக்கு ஆளுநர் அலுவலகத்தால் கடிதம் அனுப்பும் அளவுக்கு நிலைமை காணப்படுகின்றது.

“மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அதிகாரம் என்ன,  ஏன் இந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் இருக்க வேண்டும், இது  ஒரு கண் துடைப்புக்கு மக்களை ஏமாற்றுவதற்காக வேண்டி அரசாங்கத்தால் கொடுக்கப்படுகின்ற பதவிகளாகும்.

“இலங்கையினுடைய பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது. பொருளாதாரத்தை மீட்பது அல்லது பொருளாதார நடவடிக்கைகளை கட்டி அமைப்பதிலே எங்களுடைய பங்கு இருக்கும்.

“ஆனால், அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவிகளை ஏற்பதை நாங்கள் தவிர்த்துக் கொள்ள விரும்புகின்றோம். இந்த விடயங்கள் தொடர்பில் விரைவில்  அனைவருடனும் பேசி ஒரு தீர்வை எடுப்போம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .