2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நாவாந்துறையில் மோதல் ; இருவர் கைது

Freelancer   / 2023 ஜூலை 19 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த் 

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இருவர் செவ்வாய்க்கிழமை (18)  கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாவாந்துறை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(16) இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியின் போது கிராமத்தை சேர்ந்த இரு குழுவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. 

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து , பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு , நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

அதேவேளை மோதலின் போது காயமடைந்த நான்கு பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் இருவரை கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .