Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2022 ஜூலை 20 , பி.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
குருதிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயதுச் சிறுவனுக்கு நாடி வைத்தியம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட சிகிச்சையால் அச்சிறுவன் மரணித்துள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர், உரும்பிராயில் உள்ள நபர் ஒருவரின், நாடி வைத்தியத்தை நம்பி, சிகிச்சைக்கு ஏதுவாக யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் தங்கியிருந்து மகனுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன், வட்டுக்கோட்டையில் உள்ள வீடொன்றில் திங்கட்கிழமை (18) உயிரிழந்தார் .
அதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார், சடலத்தை மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடல்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைத்தனர் .
உடற்கூற்றுப் பரிசோதனையில் சிறுவனுக்கு குருதிப் புற்றுநோய் இருந்தமை கண்டறியப்பட்டது .
இந்நிலையில், திடீர் இறப்பு விசாரணையில் சிறுவனுக்கு உரும்பிராயில் உள்ள நாடி வைத்தியம் செய்யப்பட்டதாக பெற்றோரால் தெரிவிக்கப்பட்டது .
குருதிப் புற்றுநோய்க்கு சிறப்பு மருத்துவம் உள்ள நிலையில், நாடி வைத்தியம் சிறந்தது என்று சிறுவனின் பெற்றோரால் நம்பப்பட்ட நிலையில் இந்தப் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது .
சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மற்றும் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை, மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளது .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago