Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 28 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
நாட்டின் பொருளாதார மந்த நிலையை கருத்திற்கொண்டு நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி பிரதேச சபையினால் இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் நல்லூர் பிரதேச சபையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
பொதுமக்களை உணவுப் பஞ்சத்தில் இருந்து பாதுகாக்கவும் வறுமை நிலையிலிருந்து தணிப்பதற்கும், பிரதேச சபையின் நிதிப் பங்களிப்புடன் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் இரண்டு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நல்லூர் பிரதேச சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமைய குறுங்கால வீட்டுத் தோட்டப் பயிர் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக பெறப்படும் பயனாளிகளுக்கு விதைகள் நாற்றுகள் இயற்கைப் பசளை வழங்கப்பட்டு அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
மேலும் சனசமூக நிலையங்களை தயார்ப்படுத்தி உணவுப் பஞ்சம் பற்றாக்குறையில் இருக்கும் குடும்பங்களுக்கு உடனடியாக உணவுப் பொதிகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணி வசதியுள்ளவர்கள் கண்டிப்பாக வீட்டுத் தோட்டங்களை உருவாக்கி மேம்படுத்த வேண்டும்.
அவர்களுக்கு எந்த உதவிகளையும் நல்லூர் பிரதேச சபை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளது. எம்முடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்கள் தயாராக உள்ளன என்றார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago