2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நங்கூரத்தை திருடிய கடற்படை வீரர் கைது

Princiya Dixci   / 2022 மார்ச் 28 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்.மாதகல் கடற்கரையில் மீனவர்களின் படகுகளிலிருந்த நங்கூரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் மாதகல் - லுார்து மாதா கோவிலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் தரித்து விடப்படும் மீனவர்களின் படகுகளில் இருந்த நங்கூரங்கள் களவாடப்பட்டு, பட்டா ரக வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.

இது தொடர்பாக இளவாலை பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் நங்கூரம் ஏற்றிய வாகனம் மடக்கி பிடிக்கப்பட்டது.

இதன்போது கைதான சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடற்படை வீரர்  ஒருவரே நங்கூரங்களை திருட உதவியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

அதனை அடுத்து முன்னெடுக்கப்பட்டு வந்த மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் கடற்படை வீரர் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .