2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

திருடனும், திருட்டு பொருளை வாங்கியவரும் கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

எரிவாயு சிலிண்டரை திருடிய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதனை வாங்கிய குற்றச்சாட்டில் கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தூர் வடக்கு மந்திரிமனை பகுதி சேர்ந்த 26 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் புத்தூர் பகுதியில் உணவகம் ஒன்றினை நடத்தி வரும் கடை உரிமையாளர் திருட்டு பொருளை வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி பொலிஸ் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் வெற்று எரிவாயு சிலிண்டர்கள் திருடப்பட்டமை தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று இருந்தது.

இதன் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் எரிவாயு சிலிண்டர் திருடிய சந்தை நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நர்களையும் மல்லாகம் நீதிமன்றத்தின் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .