2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

தாய், தந்தை சித்திரவதை: அச்சுவேலி பொலிஸில் சிறுமி சரண்

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 08 , பி.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

தாய், தந்தையர் தன்னைச் சித்திரவதை செய்கின்றனர் என சிறுமியொருவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மதுபோதையில் வரும் தந்தை, தாயுடன் சண்டை பிடிப்பதாகவும் இருவராலும் தான் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என தெரிவித்து 12 வயது சிறுமி ஒருவர் பாடசாலைச் சீருடையுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமியின் தந்தை மதுபோதையில் வந்து தாயாருடன் தினம்தோறும் சண்டை பிடிப்பதாகவும் இதனால் தன்னுடன் ஒவ்வொருநாளும் வாக்குவாதத்திலும் சண்டையிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்த சிறுமி, இன்று பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய குறித்த சிறுமி நீண்ட நாட்களாக தந்தையின் சித்திரவதையைப் பொறுக்கமுடியாது இன்று தஞ்சம் அடைந்ததாக குறிப்பிட்டார்.

தஞ்சமடைந்த குறித்த சிறுமியை கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் அச்சுவேலிப் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த சிறுமி வீட்டின் மூத்த பிள்ளை எனவும் இவரை விட இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிஸாரின் முறைப்பாட்டின்போது தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .