Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 15 , பி.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தம் முடிவடைந்த காலத்தில், தமிழர்களை கொல்ல பெரும்பான்மை இனத்தவர்களுக்கு சம்பந்தன் அனுமதி கொடுத்தாரா, சம்பந்தன் போர் குற்றவாளியா என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வவுனியா பிரதான தபாலகத்துக்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் நேற்று (15) ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றவும் தமிழ்த் தேசத்தின் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளைப் பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2,126ஆவது நாள் இன்றாகும்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக சம்பந்தன் தெரிவித்திருந்தார். காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் கொல்லப்பட்டது சம்பந்தனுக்கு எப்படி தெரியும்? அவர் அதை நம்பினால், ஆதாரம் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளை எமக்குக் காட்டவேண்டும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, சர்வதேச விசாரணையை விரும்பாததற்குக் காரணம், அது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் குற்றவாளியாக்கும் என்பதாலேயே ஆகும் என்றார் . R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
40 minute ago
3 hours ago