Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2022 செப்டெம்பர் 15 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இவர்களை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கி உள்ளது.
64 கிராம் 30 மில்லி கிராம் கொள்ளளவு உடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் நேற்றைய தினம் சூதுமலை பகுதியில் வைத்து யாழ்.மாவட்ட விசேட குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வழக்கின் தன்மையை ஆராய்ந்த நீதவான் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை பொலிஸார் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago