Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2023 ஜூன் 08 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
வீடு உடைத்து ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை திருடிய நபர் ஒருவர் இரண்டு மணித்தியாலத்திற்குள் பருத்தித் துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (07) பருத்தித் துறை இரண்டாம் குறுக்குத் தெரு பகுதி சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று காலையில் வெளியில் சென்றதை சாதகமாக பயன்படுத்தி பட்ட பகல் நேரம் வீடு உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்களை அனைத்தும் சல்லடை போடப்பட்டு 5 1/2 பவுண் நிறையுடைய இரட்டைப்பட்டு தங்கச் சங்கிலி மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன திருடிச் செல்லப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் நண்பகல் 12.00 மணியளவில் பருத்திதுறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து இரண்டு மணித்தியாலத்துக்குள் மூன்றாம் குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் திருடப்பட்ட தங்க நகையை மண்ணில் புதைத்து வைத்திருந்த நிலையில், பருத்தித்துறை பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் மீட்க்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரையும், மீட்கப்பட்ட தங்க நகையினையும் பருத்தித்துறை பொலிஸார் இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago