2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

டெங்கு நோயால் பெண் உயிரிழப்பு

Freelancer   / 2022 நவம்பர் 04 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த 63 வயதான அன்னலிங்கம் திருச்செல்வி என்ற 5 பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை மாலை காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், மறுநாள் செவ்வாய்க் கிழமை காலை அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பயனின்றி நேற்று (03) உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கு டெங்கு காய்ச்சலே காரணம் என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளதுடன், இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார். (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .