2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சோற்றில் விசம் வைத்து 35 உயிர்களை கொன்ற சம்பவம்

Freelancer   / 2022 ஒக்டோபர் 29 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை பகுதயில் தனது வயல் காணிக்குள் புகுந்த கோழிகளுக்கு விசம் வைத்த நிலையில், 35 கோழிகள்  உயிரிழந்துள்ளதாக கோழி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை பகுதியில் உள்ள வயல் நிலமொன்றிற்குள் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று கோழி உரிமையாளர்களின் 35 கோழிகள் உட்புகுந்த நிலையில் கோழிகளுக்கு சோற்றில் விசம் வைத்து அவை இறந்துள்ளதாக குறித்த கோழிகளின் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் ஆணைக்கோட்டை வயல் நிலப்பகுதியில் ஆங்காங்கே கோழிகள் இறந்த நிலையில் காணப்பட்டன.

குறித்த வயல் நில உரிமையாளரின் எல்லை வேலிகள் பிரதேச வாசிகளால் தீயிடப்பட்ட நிலையில் குறித்த நபர் மானிப்பாய் பிரதேச சபையில் ஊழியராக பணிபுரிகின்றார் என அறியமுடிகிறது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .