-எஸ். நிதர்ஷன்
"ஒரே நாடு ஒரே இனம்" என்ற கோஷம் எழுப்பியவாறு, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர், யாழ்ப்பாணத்தில், இன்று (04), சுதந்திர தின பேரணியொன்றை நடத்தினர்.
இந்தப் பேரணியின் நிறைவில், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர பங்கேற்று, யாழ்ப்பாணப் பொது நூலக முகப்பில் விளக்கேற்றி வைத்தார்.
இந்தப் பேரணிக்கு பொலிஸார் எத்தகையை தடையையும் ஏற்படுத்தவில்லை.
யாழ்ப்பாணம் - பண்ணை சுற்றுவட்டத்தில் ஆரம்பமான இந்தப் பேரணி, கோட்டையை சுற்றி ஏ-9 விதிச் சந்தி ஊடாக, கேகேஎஸ் வீதியில் பயணித்து, சத்திரச்சந்தியால், வைத்தியசாலை வீதியால் பயணித்து, மகாத்மா காந்தி வீதியுடாக யாழ்ப்பாணம் பொது நூலகத்தை வந்தடைந்தது.
இலங்கையின் சுதந்திர தினத்தை, வடக்கு - கிழக்கில் கரிநாளாகப் பிரகடனத்தி, தமிழ் மக்கள் பல்வேறு வாழ்வுரிமை - நீதிப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மக்களின் எழுச்சிப் போராட்டத்துக்கு, கொவிட் -19 தொற்றுநோயைக் காரணம் காட்டி, நீதிமன்றத் தடை உத்தரவு பெற்று தடுக்க முற்பட்ட பொலிஸார், இந்தப் பேரணிக்கு அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.