Editorial / 2023 செப்டெம்பர் 14 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்
சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள யாழ்ப்பாண நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
காய்ச்சல் காரணமாக யாழ்ப்மாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட "கானுலா" உரிய முறையில் பொருத்தப்படாததால் , சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம், மத்திய சுகாதார அமைச்சு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் , சிறுமியின் பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய , யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் குறித்த வழக்கு புதன்கிழமை (13) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , நீதிமன்றினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, விசாரணைகள் முடிவடையவில்லை எனவும் , அதற்கு தமக்கு மேலதிகமாக 10 நாட்கள் தேவை எனவும் மன்றுக்கு அறிவித்தனர்.
அதனையடுத்து , துண்டிக்கப்பட்ட கையின் பாகத்தை பொலிஸார் ஊடாக கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு , அது தொடர்பிலான அறிக்கையை பெறுமாறு உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு திகதியிட்டு ஒத்திவைத்தது.
10 minute ago
22 minute ago
45 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
45 minute ago
57 minute ago