Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Editorial / 2024 மார்ச் 22 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழில் உள்ள பிரபல பாடசாலை அதிபருக்கு எதிராக யாழ்.கல்வி வலயத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலைக்கும் , கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றுக்கும் இடையில் அண்மையில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெற்றது.
போட்டி நாட்களில் மாணவர்கள் உற்சாகமாக வீதிகளில் பாண்ட் வாத்தியம் இசைத்து ஆடி பாடி மகிழ்ந்தனர். அதன் போது அயலில் உள்ள பெண்கள் பாடசாலைகளின் முன்பாகவும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு தகவல் கிடைத்து , அவ்வாறு கொண்டாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களில் அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அதிபர் , பெற்றோர்களை பாடசாலைக்கு அழைத்து, பிள்ளைகளுடன் அயல் பாடசாலைகளுக்கு சென்று சிரமதான பணிகளில் ஈடுபடுங்கள் என பணித்துள்ளார்.
அதிபரின் பணிப்புரையை ஏற்று பெருமளவான பெற்றோர் தமது பிள்ளைகளுடன் சென்று அயல் பாடசாலைகளில் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.
அதிபரின் செயற்பாடு குறித்து வடமாகாண கல்வி பணிமனைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து , வலய கல்வி பணிமனை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago