2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சமையல் அறையில் கசிப்பு உற்பத்தி: ஒருவர் கைது

Freelancer   / 2022 ஒக்டோபர் 21 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் செல்வபுரம் பகுதியில் வீட்டின் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 15 லீட்டர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த வீட்டினை சோதனையிட்ட வேளை வீட்டின் சமையல் அறையில் 34 வயதுடைய ஒருவர் கசிப்பு காய்ச்சிக்கொண்டிருந்துள்ளா.ர் 

அதனை அடுத்து அவரை கைது செய்த பொலிஸார் அங்கிருந்த 15 லீட்டர் கசிப்பையும் மீட்டு இருந்தனர். அத்துடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .