2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சட்டவிரோத கொல்களம் முற்றுகை

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 04 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் ஒன்று, பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு, 50 கிலோகிராம் இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , மாடு ஒன்றும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, ஏபி வீதியில் சட்டவிரோதமான முறையில் கொல்களம் இயங்கி வருவதாகவும், மாடுகளை திருடி வந்து அங்கு கொலை செய்யப்பட்டு, இறைச்சியாக்கி விற்கப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கு நின்ற 42 வயது நபரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 50 கிலோகிராம் நிறையுடைய மாட்டிறைச்சியும் கைப்பற்றினர்.

அத்துடன், கொலை செய்வதற்காக அங்கு கட்டப்பட்டிருந்த மாடு ஒன்றையும் பொலிஸார் உயிருடன் மீட்டதுடன், மாடுகளை கொலை செய்து இறைச்சி ஆக்குவதற்கான ஆயுதங்களையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட நபரை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .