Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2022 மே 23 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிதர்ஷன்
தமிழ்த் தேசிய சைவ மன்னன் 02ஆவது சங்கிலி மன்னனின் 403ஆவது நினைவேந்தல் அஞ்சலிகள், யாழ். நல்லூர் சங்கலியின் கோட்டையின் முன்பாக உள்ள நினைவு தூவியில் நேற்று (22) நடைபெற்றன.
இலங்கை சிவசேனை அமையத்தின் எற்பாட்டில், “இந்துவாக வாழ்வோம் - இந்து சமயம் காப்போம்” என்னும் கருப்பொருளில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வின் முதன்மை விருந்தினராக யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சங்கிலியன் மன்னனின் உருவச் சிலைக்கான மலர்மாலை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக தொல்லியல் மற்றும் மரபுஉரிமைகள் பீட பீடாதிபதி கலாநிதி புஸ்பரட்ணம், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியரும் ஆகிய கலாநிதி பாலசுந்தரம் பிள்ளை, யாழ். மாநகர பிரதி முதல்வர் துறைராஜா ஈசன்மற்றும் யாழ். மாநகர சபையின் செயலாளர் வ.ஜெயசீலன், மதகுருமார்கள், கல்வியாளர்கள், சமூக ஆய்வாளர்கள் கலந்துகொண்டு நினைவேந்தல் செலுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago
4 hours ago