Mayu / 2024 ஜனவரி 31 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். சுன்னாகம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (30) இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளது.
சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் (வயது 36) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அயலவர்களான உறவினர்கள் இருவருக்கும் இடையில் கோழி வளர்ப்பினால் பிரச்சனைகள் நிலவி வந்துள்ளன.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (30) இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளது.
கத்திக்குத்துக்கு இலக்கான நபர் உயிரிழந்ததை அடுத்து , 57 வயதுடைய அயலவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்.றொசாந்த்
46 minute ago
4 hours ago
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
4 hours ago
14 Dec 2025
14 Dec 2025