2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கொள்ளையில் ஈடுபட்ட இருவர் சிக்கினர்

Freelancer   / 2022 ஏப்ரல் 21 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து, வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்றது.

குறித்த வீட்டினுள் புகுந்த இருவர் அங்கிருந்தோரை எழுப்பி அடித்துக் காயப்படுத்தி அச்சுறுத்தி மூன்றரைப் பவுண் நகையை கொள்ளையடித்து தப்பித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஏழாலை குப்பிளானைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடைய சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் கொள்ளையிட்ட நகைகளை சுன்னாகத்தில் அடகு வைத்த நிலையில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .