2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Janu   / 2025 ஜனவரி 29 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்து நாட்டுக்கு கடத்திவரப்பட்ட கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (28) அன்று யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து ஒரு மில்லியன் ரூபாய் பெருமதியுடைய 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X