Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 ஜூலை 30 , மு.ப. 08:38 - 1 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
"மாதாவிடம் நேர்த்தி வைத்தும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை" அந்த விரக்தியிலேயே ஆனைக்கோட்டையில் மாதா சிலைகளை சேதப்படுத்தினேன் என , மாதா சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆறுக்கு மேற்பட்ட இடங்களில் மாதா சிலைகள் வெள்ளிக்கிழமை (28) அதிகாலையில் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
அது தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார், சுதுமலை தெற்கு, சாவல்காடு பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், நான் சைவ சமயத்தை சேர்ந்தான். மனைவி கிறிஸ்தவர். இருவரும் திருமணம் செய்து சில வருடங்களாகின்றன. குழந்தை கிடைக்காத விரக்தியில் இருந்தேன்.
அவ்வேளையில் , “குழந்தை வேண்டுமென மாதவிடம் நேர்த்தி வைத்தேன். இருந்தும், பிள்ளை கிடைக்காத விரக்தியில் இருந்தேன். இதனால், ஆத்திரத்தில் மாதா சிலைகளை சேதப்படுத்தினேன்“ என தெரிவித்துள்ளார்.
M ranjith Sunday, 30 July 2023 10:14 AM
சிலைகளை இறைவனாக நினைப்பதால் தான் இது போன்ற பிரச்சனை கள் ஏற்படுகின்றன
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
33 minute ago
43 minute ago