2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

குழந்தை மீது பாலியல் துஷ்பிரயோகம் தந்தைக்கு விளக்கமறியல்

Editorial   / 2022 டிசெம்பர் 12 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

தனது மூன்று வயது பெண் பிள்ளையின் பெண் உறுப்புக்குள் விரல் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பருதித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிராமம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 சந்தேக நபரான 38 வயதுடைய நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்மறியல் வைக்க பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் பொண்ணுத்துரை கிரிசாந்தன், இன்று (12) உத்தரவிட்டார்.

மனைவி இல்லாத நேரம் குறித்த நபர் தனது மூன்று வயது மகளின் பெண்ணுறுப்புக்குள் விரலை நுழைத்து  தனது இச்சைக்கு பயன்படுத்தி உள்ளார்.

பெண்ணுறுப்பில் காயம் ஏற்பட்டதை அவதானித்த தாயார் இது தொடர்பில் பருத்துத்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்தார்.

இதன் அடிப்படையில் தந்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அந்த சந்தேகநபருக்கு ஏற்கென​வே மூன்று பிள்ளைகள் இருக்கின்றனமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .