2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கிளிநொச்சியில் யானைகளின் தொல்லை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - வன்னேரிக்குளம் கிராமத்தில் யானைகளின் தொல்லையினால் சிறுபோக அறுவடையினை விவசாயிகள் விரைவாக மேற்கொண்டு வருகின்றனர்.  

வன்னேரிக்குளம் கிராமத்தில் இரு பிரிவுகளாக சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் முதலாம் கட்ட சிறுபோக அறுவடையினை விவசாயிகள் விரைவாக மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

சிறுபோக வயல் நிலங்களுக்குள் யானைகள் புகுந்து பயிர் அழிவுகளை ஏற்படுத்துவதன் காரணமாக அறுவடையினை விரைவாக மேற்கொள்ள வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர்.  

1953ஆம் ஆண்டு தொடக்கம் கிளிநொச்சி மாவட்டத்தில் யானைகளின் தொல்லை கூடுதலாக காணப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்னியங்குளம் போன்ற கிராமங்களில் யானை வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதன் காரணமாக வன்னேரிக்குளம் கிராமத்திற்குள் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படாத சந்தரப்பத்திலேயே கிராமத்தின் நடுப் பகுதி வரை வருகை தரும் யானைகள் தென்னை, பலா, வாழை போன்ற பயன்தரு மரங்களை அழித்து வருகின்றன.  

கிராமத்திற்கு கூட்டங்களை நடாத்த செல்லும் அதிகாரிகளிடம் யானைகளைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுங்கள் என வன்னேரிக்குளம் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .