2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கிராம சேவையாளரிடம் வழிப்பறி கொள்ளை

Janu   / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் பெண் கிராம சேவையாளரிடம் இருந்து ஒரு இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசி உள்ளிட்டவை வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகில் சனிக்கிழமை (07) வீதியில் பயணித்துக்கொண்டிருந்த  பெண் கிராம சேவையாளரின் கை பையில் , மோட்டார்சைக்கிள் வந்த இரு இளைஞர்கள் பறித்து சென்றுள்ளனர். 

கை பையினுள் இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசி உள்ளிட்டவற்றுடன் முக்கிய ஆவணங்கள் சிலவும் காணப்பட்டதாக கிராம சேவையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிராம சேவையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எம். றொசாந்த் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X