Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 07 , பி.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - பிறவுண் வீதி, கலட்டிச் சந்தியை அண்மித்த, சனநடமாட்டம் அதிகமுள்ள புளியடிப் பகுதியில் அத்துமீறிக் குப்பைகளைக் கொண்டுவந்து போடுபவர்களை அந்தப் பகுதியில் வதியும் இளையவர்கள் சமூக வலைத் தளங்களில் காணொலி ஆதாரங்களுடன் வெளியிடத் தயாராகி வருகின்றனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் விடுதிகள், யாழ்ப்பாணம் தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவற்றை அண்மித்த இந்தப் பகுதி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடமாகும்.
இந்தப் பகுதியில் அத்துமீறிக் குப்பைகளைக் கொட்டுபவர்களால் அந்தப் பகுதியில் வதிபவர்களும், பல்கலைக்கழக, தொழிநுட்பக் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகக் கல்லூரி மாணவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.
வெளியிடங்களில் இருந்து வாகனங்களில் கொண்டுவந்து குப்பைகளையும், கழிவுகளையும் பலர் இந்த வீதியில் வீசி விட்டுச் செல்வதனால் அவை வீதிக்குக் குறுக்காக விலங்குகளால் இருத்து விடப்படுவதனால் நடந்து செல்வோர் உட்படப் பலர் இடையூறுக்கு உள்ளாக வேண்டியுள்ளதாகவும், மனிதக் கழிவுகள் உட்பட வெறுக்கப்படத்தக்க கழிவுகளை வீசுவதனால் அவை துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீர்கேடுகளை எதிர் நோக்க வேண்டி இருப்பதாகவும் பலர் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி நல்லூர் பிரதேச சபையினருக்கு அறிவிக்கப்பட்டு, பிரதேச சபையினர் தினமும் அவற்றை அகற்றி வருகின்ற போதிலும், வார இறுதி நாட்களில் வாகனங்களில் வரும் பிரபல வைத்தியர்கள், அதிகாரிகள் உட்படப் பலர் தம்முடன் எடுத்துவரும் குப்பைப் பொதிகளை வீசி விட்டுச் செல்வதைப் பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர். இவ்வாறானவர்களை சமூக வலைத்தளங்களுக்கூடாக அம்பலப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். எனினும் அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தாத வகையில் இத்தகவலை வெளிப்படுத்திய பின்னரும் இத்தகைய இழிசெயலைச் செய்வோரை அம்பலப்படுத்தவுள்ளதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த இளையோர் குறிப்பிட்டுள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
27 minute ago
37 minute ago