Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Princiya Dixci / 2022 ஜூலை 27 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், வி.நிதர்ஷன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடம் நடத்தும் ‘மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாடு, எதிர்வரும் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.
‘மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் நூற்றாண்டு: தொடர்ச்சிகள், விலகல்கள், செல்நெறிகள்’எனும் கருப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டுத் தொடரின் ஒருபகுதியாகக் கலைப்பீடம் இந்த மாநாட்டை ஒழுங்கமைத்துள்ளது.
இது தொடர்பாக, ‘மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாட்டின் அமைப்புக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
“புரட்சிகரமான திறவுகள் மற்றும் நெருக்கடிமிக்க சவால்களை உள்ளடக்கிய இந்த நூற்றாண்டுகால கால வரலாற்றை மீட்டுப் பார்த்து, அதனை விசாரணை செய்யும் செயன்முறைகளின் ஒரு பகுதியாகவும், மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் தற்போதைய நிலைமையை இந்த வரலாற்றின் வெளிச்சத்தில் இருந்து அணுகுவுதற்கும், விளங்குவதற்குமான ஒரு முயற்சியாகவும் இந்த சர்வதேச ஆய்வு மாநாடு அமையும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகும் தொடக்க நிகழ்வுக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.
மாநாட்டின் பிரதான ஒழுங்கமைப்பாளர் கலாநிதி ரி.சனாதனன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் கே. சுதாகர், ஆய்வு மாநாட்டின் பிரதம ஆசிரியர் கலாநிதி எம். திருவரங்கன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago