Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2023 மார்ச் 01 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - ஐயன்கன்குளத்தினை புனரமைத்துத் தருமாறு ஐயன்கன்குளம் கமக்கார அமைப்பு வடமாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
அக்கடிதத்தில் குறிப்பட்டுள்ளதாவது,
“பல காலமாக புனரமைப்பு வேலைகள் இடம்பெறாமையால் ஐயன்கன்குளம் சேதமடைந்து காணப்படுகின்றது. விவசாயிகளாகிய நாங்கள் ஒவ்வொரு மழை காலத்திலும் மண் மூடைகளை அடுக்கி குளத்தை பாதுகாத்து வருகின்றோம்.
“அத்துடன், குள வாய்க்கால்கள், குள வீதிகள் என்பன மிக சேதமடைந்துள்ளன. வயலுக்கு நீரை பாய்ச்சவும் வயலில் இருந்து நெல் மூடைகளை எடுத்து வரவும் மிகவும் சிரமமாக உள்ளது. அதிகளவு பணத்தையும் செலவு செய்கின்றோம்.
“இதனால் விவசாயிகள் பலர் விவசாயத்தைக் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
“குளத்தை புனரமைத்துத் தருமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் பலமுறை நாம் கோரிக்கை விடுத்த போதும் அவர்கள் தொடர்ந்தும் அதனை உதாசீனம் செய்வது வருகின்றனர். இதனால் குள நீர் வாய்க்கால்கள் மூலம் பாரிய நீர் இழப்பு ஏற்படுகின்றது.
“இவ்விடயத்தில் தாங்கள் தலையிட்டு, எமது குள வேலைகளை, எமது நியாயமான கோரிக்கைகளை இவ்வருடமாவது நிறைவேற்றித் தர வேண்டுமென தயவுடன் வேண்டுகின்றோம்.
“விவசாயத்தை நம்பியே 350 குடும்பங்கள் வசித்து வருவதுடன், எமது வாழ்வாதாரம் விவசாயமே என்பதைத் தங்களுக்கு அறியத்தருகின்றோம்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago