2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

எரிபொருள் பெற இணைய வசதி ஊடாக விண்ணப்பிக்கலாம்

Freelancer   / 2022 ஜூலை 12 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தினை சீராக்குவதற்கு இணைய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள்   (bit.ly/3nPMFv) இந்த இணைப்பின் ஊடக தங்களது ஸ்மாட் தொலைபேசி, கணணி மூலம் எரிபொருளுக்கான கோரிக்கையினை முன்வைக்கமுடியும்.

எரிபொருள் கிடைக்கப்பெறும்போது பொதுமக்களுக்கு எரிபொருள் பெறுவதற்கான திகதி, நேரம் என்பன பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலமாக அறிவிக்கப்படும்.

பொதுமக்கள் குறித்த நேரத்தில் தங்களுக்குரிய எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.

குறித்த எரிபொருள் கோரிக்கைக்கான விண்ணப்பத்தினை  மாவட்ட செயலக இணையதளத்தின் ஊடாகவும் அணுகமுடியும்.

இவ்வாறு இதனை பயன்படுத்த முடியாதவர்கள் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்புகொண்டு அதனை அணுகமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .