2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மீது தாக்குதல்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 05 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று (04) பெட்ரோலை பெற்றுக்கொள்ள சென்றவர்கள் கியுஆர்கோட்டினை காட்டியுள்ளார்கள். அந்த கியுஆர் கோட்டுக்கு ஏற்கெனவே பெட்ரோல் அடிக்கப்பட்டு விட்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பெட்ரோலை கட்டாயம் அடிக்க வேண்டுமென அடம்பிடித்த அங்கு வந்த குழு, முகாமையாளர் கதைத்து பேசிக்கொண்டு நிக்கும் போது திடீரென முகாமையாளர் மீதும் ஊழியர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

காயங்களுக்கு இலக்கான முகாமையாளர் மற்றும் உழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு பொலிஸார் கடமையில் இருக்கும் போதே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளதுடன், எரிபொருள் நிரப்பு நிலைய சொத்துக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த காலங்களில் பல முரண்பாடுகள் ஏற்பட்டு வந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .