2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

எரிபொருளை பதுக்கிய ஒருவர் கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மன்னாகண்டல் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் எரிபொருளை  பதுக்கிய  குற்றச்சாட்டில் , ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 1,590 லீற்றர்  டீசலினை தனது  உடமையில்  வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே  குறித்த நபர் புதுக்குடியிருப்பு  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த  நபர்  கனரக  இயந்திரங்கள் , உளவு  இயந்திரங்கள்,  டிப்பர்  வாகனங்கள் என்பவற்றை  வைத்து  பாரியளவிலான  விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.

இதேவேளை குறித்த வழக்கை பதிவு  செய்த புதுக்குடியிருப்பு  பொலிஸார் கைதாகிய சந்தேக  நபரையும் , சான்று பொருட்களையும் மாவட்ட  நீதவான் நீதிமன்றில்  பாரப்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .