2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

“என் மகன் எனக்கு வேண்டாம்’’ தாய் எடுத்த முடிவு

Freelancer   / 2022 ஒக்டோபர் 11 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த் 

"எனது மகன் எனக்கு வேண்டாம்" என தாய் ஒருவர் கடிதம் எழுதி தனது மகனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். 

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அவரது மகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் தாயொருவர் தனது 15 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளமையால், மகனை தன்னால் பராமரிக்க முடியவில்லை என கூறி " எனது மகன் எனக்கு வேண்டாம்" என தனது கைப்பட கடிதம் எழுதி பொலிஸாரிடம் வழங்கி , தனது மகனையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். 

அதனை அடுத்து பொலிஸாரினால் குறித்த சிறுவன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , சிறுவனை அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு மன்று உத்தரவிட்டதற்கு அமைய சிறுவன் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.  (R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .