2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

இளைஞன் மீது கோடாரி தாக்குதல்

Mayu   / 2024 ஜூன் 06 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அச்சுவேலி உளவிக்குளம்  ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை கோடாரியால் தாக்கப்பட்ட சம்பவமொன்று  இடம்பெற்றுள்ளது.

உளவிக்குளம் ஆலயத்தின் உப தலைவராக செயற்பட்டுவரும் 38 வயதுடைய அச்சுவேலி உளவிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது கோடாரி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (06) இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கோடரி ஒன்றினால் குறித்த இளைஞரை தாக்கியுள்ளனர் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் கையில் பலத்த காயத்துக்கு உள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலைக்கு செல்வதற்காக சென்று கொண்டு இருந்தபோது ஆலயத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் வைத்து வழி மறித்த கும்பல் இளைஞரை சராமாரியாக தாக்கியதில் குறித்த இளைஞன் கைகளில் பலத்த காயம் அடைந்தார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

நிதர்ஷன் வினோத் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X