Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 மார்ச் 07 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை, மெரைன் பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை (07) காலை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கோப்பேரிமடம் சோதனை சாவடியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் இருந்த 20 மூட்டைகளில் மேற்படி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
450 கிலோகிராம் பூச்சிக் கொல்லி மருந்துகள், 125 கிலோகிராம் அழகு சாதன பொருட்கள் மற்றும் கைக்கடிகாரம் உள்ளிட்ட பேஃன்ஸி பொருட்கள் இதற்போது பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றை எடுத்துச் செல்ல எவ்வித ஆவணங்கள் இல்லை. இது குறித்து வாகனத்தில் இருந்த 2 பேரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இருவரையும் மரைன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த பொருட்களை கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்து வந்தமை தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் இராமநாதபுரம் சுங்கத்துறையினரிடம் மரைன் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
6 hours ago
21 Apr 2025
21 Apr 2025