Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 ஜூலை 31 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
தொண்டமானாறு கடல் நீர் ஏரி பகுதியின் நன்னீர் அணைக்கட்டின் தெற்கு பகுதியில் உள்ள கடல் நீரேரியில் மீன்கள் இறந்து மிதக்கின்றன.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே போன்ற சம்பவம் பதிவாகி இருந்ததுடன், மீண்டும் எட்டு வருடங்களுக்கு பின்னர் இவ்வாறு மீன்கள் இறந்து காணப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்
இது காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் -யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபா சிவகுமாரிடம்வினவிய பொழுது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த மாத காலப்பகுதியில் கடும் வெப்பம் காரணமாக வெப்பநிலை 30 பாகை செல்சியஸ்க்கு மேல் காணப்பட்டது.
இதன் காரணமாக நன்னீர் அணைக்கட்டின் தெற்கு பகுதி, இந்து சமுத்திரத்துடன் தொடுகையுடன் உள்ள பகுதியுடன் ஒப்பிடும் பொழுது கடும் வெப்பம் காரணமாக நீர் வற்றி, நீர் மட்டம் மிகவும் குறைவடைந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக உப்பு செறிவு அதிகரித்து காணப்படுகிறது. அத்துடன் ஒக்சிஜனின் அளவும் குறைவடைந்துள்ளமை அவதானிக்க கூடியதாக உள்ளது.
குறிப்பாக உப்பு செறிவு அதிகரிப்பும் வெப்பநிலை அதிகரிப்பும், வளிமண்டல ஒக்ஸிஜனை நீரில் கரையும் தகவை மேலும் குறைவடைய செய்யும்
இதன் காரணமாக இங்குள்ள மீன்களுக்கு ஒக்சிசன் கிடைக்காத காரணத்தினால் இந்த இறப்பு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
4 hours ago