2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

இரு குடும்பங்களை சேர்ந்த எழுவர் தமிழகத்தில் தஞ்சம்

Princiya Dixci   / 2022 ஜூலை 19 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

இலங்கையில் இருந்து இரு குடும்பங்களை சேர்ந்த  07 பேர் கடல் வழியாக தமிழகத்துக்குச் சென்று தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த 7 பேரையும், தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள ஐந்தாம் மணல் திட்டில் இறக்கி விட்டு, படகோட்டிகள் தப்பிச் சென்ற நிலையில், தகவல் அறிந்த தமிழக கடலோர பாதுகாப்புப் பிரிவினர் அவர்களை மீட்டு, மண்டபம் கடலோர பாதுகாப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவரும் , திருகோணமலை, ஆனந்தபுரி பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வருமே தமிழகம் சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .