2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

ஆள்மாறாடிய சட்டத்தரணி யாழில் கைது

Freelancer   / 2024 ஜூலை 24 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைதான சட்டத்தரணி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டநிலையில் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அத்துடன் சட்டத்தரணியின் அலுவலகத்தில் இருந்த மூன்று கணிணிகளையும் பகுப்பாய்வு விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இத்தாலியைச் சேர்ந்த பெண்ணொருவர், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி விவாகரத்துக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது, அவர் ஏற்கனவே விவாகரத்துப் பெற்றுள்ளார் என்று தரவுகள் வெளிக்காட்டியுள்ளன.

அந்தப் பெண் அதுவரை விவாகரத்துக்கு விண்ணப்பிக்காத நிலையில், இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணைகளில், உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவர் கனிஷ்ட சட்டத்தரணிகள் மூலமாக ஆள்மாறாட்டம் செய்து , மேற்படி தம்பதியர்கள் விவாகரத்துப் பெற்றுக்கொள்வதாக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை தெரியவந்தது.

இதையடுத்து, இது தொடர்பில் குறித்த சட்டத்தரணியின் அலுவலகத்தில் சில வாரங்களுக்கு முன்னர் பொலிஸாரால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X