Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2022 மே 22 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த் வி.நிதர்ஷன்
ஆரிய குளத்தை வைத்து குறுகிய அரசியலை நடத்த வேண்டாம் என யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆரியகுளம் தற்சமயம் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் காலத்தில் மிகச் சிறப்பாகவும் தூய்மையாகவும் அதனைப் பேண வேண்டுமென அவரிடம் கூறியிருக்கின்றோம்.
“அதேபோன்று மாநகர சபையின் அனுமதியுடன் ஆரியகுளத்தில் படகு சேவைக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. நாங்கள் பல நிபந்தனைகளை அவர்களுக்கு விதித்திருக்கின்றோம். படகு சேவைக்கான பாதுகாப்பு மற்றும் காப்புறுதிகள் செய்யப்படவேண்டும். நீச்சல் பயிற்சி பெற்ற இரண்டு ஊழியர்கள் தொடர்ச்சியாக கடமையாற்ற வேண்டும். பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கு இணங்கவே அனுமதி வழங்கப்பட்டது.
“மேலும், ஆரியகுளத்தை மாநகர சபையிடமிருந்து பறிக்கவெடுக்கும் முயற்சி என்பது யாழ்ப்பாணத்தில் அமைதியின்மையை உருவாக்கி, மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமாகும்.
“பொறுப்பில் இருக்கின்றவர்கள் ஆரிய குளத்தில் அரசியல் செய்வதை நாம் விரும்பவில்லை. அது ஒரு சாதாரண பொழுதுபோக்கு மையம். மக்களுக்காக கட்டப்பட்ட விடயத்தை மக்களிடம் விட்டுவிடுங்கள். அதை வைத்து குறுகிய அரசியலை நடத்த வேண்டாம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago