Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Freelancer / 2023 மார்ச் 04 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கத்தோலிக்க புனித திருத்தலமாகிய கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று மாலை நான்கு மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
நீண்டகாலத்தின் பின்னர் பெருமளவான இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வருடாந்த உற்சவத்திற்கான கொடியேற்ற வைபவம் சிறப்பாக இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து பாதை சிலுவை ஆலயத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்றது.
இம்முறை வருடாந்த கச்சதீவு உற்சவத்திற்கு இலங்கை கடற்படை , இந்திய துணைதூதுவராலயம், இலங்கையின வெளிவிவகார அமைச்சு ஆகியன முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளதோடு உற்சவம் சிறபாக ஆரம்பமாகியுள்ளது.
நேற்று காலை 7 மணியளவில் யாழ். மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி. ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் பொழுது 60 நாட்டுப் படகுகளிலிருந்தும் 16 இழுவை மடிப் படகுகளிலுமாக இந்தியாவிலிருந்து 2,100 பக்தர்களும் இலங்கையிலிருந்து இலங்கை கடற்படையினரின் படகுகள் மூலமும் ஏனைய தனியார் படகுகளிலிருந்தும் 2,800 பக்தர்களும் மொத்தமாக பக்தர்கள் 4,900 அதிகாரிகள் , வியாபாரிகள் 200 பேர் என மொத்தமாக 5,100பேர் கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொண்டுள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago
7 hours ago
24 Nov 2024