2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அம்பூலன்ஸ் சாரதியை தாக்கியவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 11 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

நோயாளியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற அம்பூலன்ஸ் வாகனத்தின் சாரதியை தாக்கிய நபரொருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் திடீரென சுகவீனமுற்ற நிலையில், அம்பூலன்ஸுக்கு அறிவித்து, அம்பூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதன்போது வீதியில் அம்பூலன்ஸை வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், சாரதியை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றார்.

இந்தச் இம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சாரதியை தாக்கியதாக இளைஞன் ஒருவரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

அதனை அடுத்து இளைஞனை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .