Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 மே 10 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் காரணமாக மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கை சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வியாழக்கிழமை (09) வீட்டில் தனித்திருந்த போது , வீட்டின் பின் பகுதிக்கு சென்ற வேளை திடீரென மயக்கம் ஏற்பட்டு விழுந்துள்ளார்.
சுமார் 04 மணி நேரத்தின் பின்னர் அவரது குடும்பத்தினர் வீடு திரும்பி, வீட்டில் இருந்தவரை காணவில்லை என தேடிய போது , வீட்டின் பின் முற்றத்தில் கடும் வெய்யிலுக்குள் விழுந்து கிடந்ததை கண்ணுற்று அவரை மீட்டு , தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
உடலில் வெப்ப கொப்பளங்கள் காணப்பட்டதாகவும் , அவரது உயிரிழப்புக்கு அதிக வெப்பமே காரணம் என உடற்கூற்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது , யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் "ஹீட் ஸ்ரோக்" ஏற்பட்டு அண்மைய நாட்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொது வைத்திய நிபுணர் ரி. பேரின்பராஜா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago