2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

அதிபரை மாற்றுமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்  

வவுனியா, செட்டிகுளம் கோட்டத்துக்குட்பட்ட சின்னசிப்பிகுளம் தாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும், பாடசாலைக்கு முன்பாக இன்று (01) காலை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

மேற்படி பாடசாலையில் கடமையில் இருந்த அதிபர், யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளதுடன், அவருக்கு பதிலாக மாகாண கல்வித் திணைக்களத்தால் புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அதிபர், நேற்று கடமைகளை பொறுப்பேற்கவிருந்த நிலையில் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவித்தபோது, “தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிபர், எமது பாடசாலையில் ஏற்கெனவே அதிபராக பணியாற்றியிருந்தார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளதுடன், பாடசாலையில் பல்வேறு முறைக்கேடான சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

“எனவே, குறித்த அதிபரை மீண்டும் எமது பாடசாலைக்கு நியமித்து, பாடசாலையின் அபிவிருத்தியில் வீழ்சியை ஏற்படுத்த வேண்டாம். இவருக்குப் பதிலாக முன்னைய அதிபரையோ அல்லது வேவொரு அதிபரையொ நியமிக்குமாறு கோருகின்றோம்” என்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .