Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2022 ஏப்ரல் 07 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட முள்ளியவளை உப பிரதேச செயலகத்தின் அதிகாரிகளின் அசமந்த போக்கினால் தமது வீட்டுக்குச் செல்லும் வீதி தடைப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபரொருவர் தெரிவித்தார்.
பொது வீதியைப் பிடித்து, எல்லைஇட்டு, மதில்கட்டும் நடவடிக்கை தொடர்பில் பிரதேச சபை உள்ளிட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.
முள்ளியவளை, 03 ஆம்வட்டாரம், ஜயன்கோவிலடி பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர், தனது வீட்டுக்குச் செல்லும் பிரதேச சபைக்குரிய வீதியை மறித்து, தூண்போட்டு தகரம் அடித்துள்ளதால், வீதியில் செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளார்.
27 ஆண்டுகளுக்கு மேலாக பாவனையில் இருந்த வீதியை பிடித்து வேலியிடுவதற்கு யார் அனுமதி கொடுத்தது என்ற கேள்வி எழும்பியுள்ளது.
பிரதேச சபையின் வட்டார உறுப்பினர் சி.லோகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் க.விஜிந்தன் ஆகியோருக்குத் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வீதி காணப்படுவதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடைபெற்று ஒருமாதம் கடந்துவிட்ட நிலையில், தற்போது வீதியை மறித்து, மதில் கட்டும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தான் பொலிஸ், பிரதேச சபை, அரசாங்க அதிபர் உட்பட அரச திணைக்களங்களுக்குத் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மனித உரிமை ஆணைக்குழுவை நாடவுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago