2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அகழ்வு பணிகள் இடைநிறுத்தம்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 18 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த்

யாழ்ப்பாணம், இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் புதையலை அகழும் பணிகள், நேற்று (17) மதியம் 2 மணியுடன் நிறுத்தப்பட்டது.

குறித்த வீட்டில் புலிகளின் புதையல்கள் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரசிய தகவலின் அடிப்படையில், புதையலை அகழ்வதற்கான அனுமதியை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் கோரினர். 

நீதிமன்ற அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில், நேற்று சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 2 மணி வரையில் புதையல் அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

புதையல் அகழ்வதற்காக கொழும்பில் இருந்து விசேட அணியினர் வந்திருந்த நிலையில் , அகழ்வு பணிகளுக்காக கனரக வாகனங்களும்  பயன்படுத்தப்பட்டன. 

 மதியம் 2 மணிவரையில் யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் அகழ்வு இடம்பெற்ற போதும், எவ்விதமான பொருட்களும் மீட்கப்படாத நிலையில், அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .