2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி

Editorial   / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி யாழ். பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இத்தூபி அமைக்கும் பணிகள் பல்கலை மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் குறித்த பகுதியில் தூபியை அமைப்பதற்கு பல்கலை நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஆரம்ப கட்ட வேலையுடன் இடைநிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று குறித்த தூபியை முழுமையாக பல்கலை மாணவர்கள் நிறுவியுள்ளனர். இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள், தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் உறவுகள் என பலருடைய நினைவாக இந்த தூபி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த தூபியின் இறுதிக்கட்ட வேலைகள் நிறைவு செய்யப்பட்டு இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .