2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

45 நடன குளிசைகள் சிக்கின

Editorial   / 2017 ஜூலை 20 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரவு விடுதிகளில் இடம்பெறும் வைபவங்களில் பங்கேற்போருக்கு விநியோகிப்பதற்காக, கொண்டுவரப்பட்ட போதை மாத்திரைகள் 45ஐ கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக கிராண்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.  

‘நடன குளிசை’ எனும் பெயரிலேயே, இந்தப் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறான குளிசையொன்று 4,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அறியமுடிகின்றது. பொலிஸாரினால், நேற்று (19) கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாயாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .