2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் கண்காட்சி

Thipaan   / 2015 ஜூன் 14 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

இந்த ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாடும் இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் அணியினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இஸ்லாமியக் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள  அஹ்மதிய்யா முஸ்லிம் பள்ளிவாசலின் ஜுப்லி மண்டபத்தில் சனிக்கிழமை(13) மற்றும் ஞாயிற்றுக்கிழமை(14) இடம்பெற்றது.

இதில், சிறுமிகளின் கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன், இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் வரலாற்றைச் சித்தரிக்கும் பல்வேறு ஆக்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அத்துடன் சிறுமிகள் மத்தியில் சித்திரப் போட்டிகளும்,  பெண்கள் மத்தியில் பழங்களைக் கொண்டு உணவு தயாரிக்கும் போட்டிகளும் இடம்பெற்றன. பெரும் எண்ணிக்கையானோர் இந்த கண்காட்சிக்கு வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .