Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kanagaraj / 2015 மே 31 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட். ஷாஜஹான்
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் ஏழு மாடிக் கட்டடம் உடைந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்;து ஏழு மாடிக் கட்டடங்களையும் 'ஸ்கேன்' செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால், வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த நோயாளிகள் வைத்தியசாலையின் வேறு வார்ட்டுகளுக்கு மாற்றப்பட்டதுடன், வைத்திய உபகரணங்கள், கட்டில்கள் மற்றும் பொருட்கள் கட்;டடத்திலிருந்து அகற்றப்பட்டன.
இதுதொடர்பாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சம்பா அளுத்வீர தெரிவிக்கையில்,
வைத்தியசாலையின் ஏழு மாடிக் கட்;டடங்களும் மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் அணுசக்தி அதிகார சபையின் உதவியுடன் 'ஸ்கேன்' செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த கட்டடத்திலிருந்த நோயாளிகளை வேறு வாரட்டுகளுக்கு மாற்றியுள்ளோம். ஊழியர்களையும் வேறு வாட்டுகளுக்கு மாற்றியுள்ளோம். பரிசோதனை நடவடிக்கைகளுக்கு நான்கு வாரங்கள் செல்லும்.'ஸ்கேன்' மேற்கொள்வதற்காக மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் ஓரு வாரத்துக்கு அந்தக் கட்டடத்துக்கு வழங்காமல் நிறுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் சுகத் தர்மரத்ன மற்றும் எமது வைத்தியசாலையின் அதிகாரிகள் உடனான கூட்டத்தின் போது இதுதொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
தற்போது வைத்தியசாலை நிர்வாகம் பெரும் இக்கட்டான நிலையில் உள்ளது. இது எமக்கு சவாலாகும். இந்த சவாலை வெற்றி கொள்ள பொது மக்கள் மற்றும் நோயாளிகளின் ஒத்துழைப்பு அவசியமாகும்.
பொது மக்களும் நோயாளிகளும் எமது ஊழியர்களுடனும் உத்தியோகத்தர்களுடனும் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. புதிய நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதை நிறுத்தவில்லை. கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வரும் நோயாளிகளை வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளர்கள் வருகின்றனர்.
இவர்களுக்கு மலசல கூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளது. எமது வைத்தியசாலைக்கு மேலும் சில கட்டடங்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். 2001 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த ஏழு மாடிக்கட்டடத்தில் அன்று முதலே நீர் கசிவு மற்றும் மின்சார பிரச்சினைகள் இருந்தன. இதுதொடர்பாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன. அப்போது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றார்.
இதேவேளை, வேறு வார்ட்டுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதை அவதானிக்க முடிந்தது. நோயாளிகள் மட்டுமன்றி வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்தோடு பெரும் சிரமத்தின் மத்தியிலேயே பணி செய்வதை காணக்கூடியதாக இருந்தது.
சத்திரசிகிச்சைக்கு உட்பட்ட ஆண் நோயாளிகள் பலர் வைத்தியசாலையின் பழைய கட்டடத்தின் வார்ட்டுகளுக்கு செல்லும் வழியில் (கொரடோர்) சுகாதார வசதிகளின்றி தங்கவைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் ஈக்கள் மற்றும் நுளம்பு தொல்லைகளினால் அவதிப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.
மலசலகூடங்களை பயன்படுத்துவதற்காக வேறு வார்ட்டுகளுக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும் காயங்களுடனும் கட்டுக்களுடனும் இருக்கும் தங்களுக்கு இது பெரும் கஸ்டமானதெனவும் துன்பமானதெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, புதிய கட்டடத்திலிருந்த உபகரணங்கள் மற்றும் கட்டில்கள் வேறு வார்ட்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால் வைத்தியசாலையில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு அதுதடையாக அமைந்துள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
2001ஆம் ஆண்டு திறந்து வைக்கப்;பட்ட ஏழு மாடிகளைக் கொண்ட புதிய கட்டடத்தில் பல இடங்களிலும் உள்ள நீர் கசிவு, மழைக் காலங்களில் லிப்ட் வழியாக நீர் ஓடுதல், நோயாளிகள் தங்கியுள்ள 'வார்டு;களில்' நீர் கசிவு, கொங்ரீட் பழுதடைந்திருத்தல், மின்சார கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் போன்றன பல வருடங்களாக தொடர்ந்து இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அந்தக் கட்டடத்தில் மேற்கொள்ளப்படும் 'ஸ்கேன்' பரிசோதனையை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
46 minute ago
1 hours ago