Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Niroshini / 2017 ஜனவரி 22 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கொலன்னாவ,வெள்ளம்பிட்டி வாழ் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மாணவர்களின் நலன் கருதி, அப்பகுதியில் அரச பாடசாலை ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கொழும்பு -12, அல் ஹிக்மா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா, மருதானை டவர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,
“கொழும்பு வாழ் முஸ்லிம் பெண்களின் கல்வி முன்னேற்றத்துக்காக, வெள்ளவத்தை மெரைன் ட்ரைவ் வீதியிலுள்ள 360 பேர்ச்சஸ் காணியொன்றை, கொழும்பிலுள்ள பிரபல முஸ்லிம் பெண்கள் கல்லூரி ஒன்றுக்கு அன்பளிப்புச் செய்யவுள்ளேன். இதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் சனத்தொகைக்கு சமமான சனத்தொகையிலான முஸ்லிம்கள், கொழும்பிலும் வாழ்கின்றனர். அம்பாறையில் முன்னேற்றம் கண்டுள்ள அளவுக்கு, தலைநகரில் வாழும் முஸ்லிம்களின் கல்வி மட்டுமல்ல, பொருளாதாரம், குடியிருப்பு, வாழ்க்கைத்தரம், அடிப்படைவசதிகள் போன்றன, முன்னேற்றம் காணவில்லை.
தலைநகரில், நிறைய பள்ளிவாசல்கள் உள்ளன. வெளிநாட்டில் உள்ள முஸ்லிம்கள் இங்கு வருகை தந்தால், முஸ்லிம் நாடொன்றில் வாழ்கின்ற ஓர் உணர்வு கொழும்பில் உள்ளதாகச் சொல்வார்கள். உலகில் உள்ள 57 நாடுகளில், 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் சீர்குழைந்துள்ளன. அந்நாடுகளில், நாளாந்தம் குண்டுச் சத்தம், உயிர்ச் சேதம், யுத்த அழிவுகளே இடம்பெறுகின்றன. அந்நாடுகளில், எவ்வளவுதான் எண்னை வளம், தங்கம் வளம் இருந்தாலும், அந்த மக்கள் அமைதியானதொரு வாழ்க்கையைத் தேடி அலைகின்றனர்” என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
4 hours ago
5 hours ago